• Jan 18 2025

பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சினை ... திரிஷாவுக்கு ஐகோர்ட் கொடுத்த உத்தரவு என்ன?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேலாக தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு போட்டியாக இன்றும் இளமை மாறாமல் நடித்து வருகின்றார். திரிஷா நடிப்பில் இறுதியாக லியோ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் உடன் இவர் மீண்டும் கூட்டணி அமைத்திருந்தார். 

இந்த படத்தில் விஜய் - த்ரிஷாவின் காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பின்பு தற்போது வெளியான கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு விஜயையும் திரிஷாவும் இணைந்து நடனம் ஆடி இருப்பார்கள். அந்த பாடலும் படு வைரலானது.


இந்த நிலையில், சென்னை செனடாப் ரோடு வீதியில் உள்ள தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில் பொதுவான பதில் சுவரை எடுத்து கட்டுமான மேற்கொள்ள பக்கத்து வீட்டுக்காரர் இருக்கு நிரந்தர தரை விதிக்க கோரி நடிகர் த்ரிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தாக்கு செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது நடிகை திரிஷா தரப்பிலும் எதிர் தரப்பிலும் பிரச்சனை இரு தரப்பிலும் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவு துறைக்கு உத்தரவிட்டு உள்ளதாக தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement