தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதன் எட்டாவது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த சீசனில் சமூக வலைத்தள பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளதால் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்க தொடங்கினர்.
அதே நேரத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யுமாறு போராட்டமும் நடைபெற்றது. பல நடிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சீசனில் பங்கு பற்றியவர்கள் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்பதை மறந்து 18 ப்ளஸ் பேச்சுக்களை பேசி வருகின்றனர். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.
அதன்படி அதில், திவாகரும் பார்வதியும் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த சபரி எல்லோரும் சாப்பிடனும் என்று சொல்றாங்க என்று சொல்ல, ஒரு அஞ்சு நிமிஷம்ல ஒன்னும் ஆகிட போறதில்ல என்று சொல்லுகிறார்.
அதன் பின்பு சமையலறைக்குச் சென்று அங்கிருந்த அமீரிடம், ஒரு அஞ்சு நிமிஷம் கேப் எடுக்க மாட்டீங்களா? என்று கேட்க, நீங்க எப்பவும் கேப் கொடுக்குறீங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
மேலும் நான் இப்போ வெளியே போய் பேசிவிட்டு வந்ததால் இங்கு ஒன்னும் குடி முழுகி போகப் போறது இல்ல என்று கனியுடன் வாக்குவாதம் பண்ணுகின்றார்.
மேலும் கனியும், நான் இங்கு தான் நிற்பேன்.. இது என்னோட வீடு.. உங்களுக்கு பேசுறதுக்கு எந்த அருகதையும் இல்லை என்று சொல்ல, நீங்க நல்லா கோள்மூட்டி வேலைய பாருங்க , நீங்க முதல் ஜெயிலுக்கு போங்க என்று பார்வதி கனியை அடக்குகிறார்.
Listen News!