டிக் டாக்கில் கதை சொல்லலாமா மற்றும் கவிதை, நடனம், இசை என்பவற்றின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை கேப்ரில்லா. ஆனாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்தது சுந்தரி சீரியல்.
சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கருப்பு தேவதையாக அறிமுகம் ஆனார். சினிமா மற்றும் சீரியலில் கலராக இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற மாயையை கேப்ரில்லா உடைத்து இருந்தார். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சுந்தரி சீரியலின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் ஒளிபரப்பப்பட்டது.
இதை தொடர்ந்து சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார் கேப்ரில்லா. இதன் காரணத்தினாலே சுந்தரி சீரியலின் இரண்டாவது பாகமும் முடிவுக்கு வந்தது. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில், சுந்தரி சீரியலில் ஹீரோவாக நடித்த ஜிஷ்ணு மேனன் நடிகை கேப்ரில்லாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு வளையல்கள் அணிவித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அதாவது பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்கும் முகமாக நடிகை கேப்ரில்லாவுக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து வளையல்களை அணிவித்து அழகு பார்த்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோவை நடிகை கேப்ரில்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
Listen News!