• Dec 08 2023

வசூலில் பட்டையைக் கிளப்பும் ஜிகர்தண்டா 2 திரைப்படம்- 4வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் . இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.

பீரியட் ஜானரில் படத்தை உருவாக்கி அதை தனித்துவமாக ப்ரெசண்ட் செய்திருக்கிறார். திரைக்கதை, மேக்கிங், நடிகர்களின் நடிப்பு என எதிலும் குறை சொல்ல முடியாது. முக்கியமாக பழங்குடி இனத்தை இதில் கனெக்ட் செய்த விதம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.இப்படி படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. 


இதனால் தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வசூலிலும் மாஸ் காட்டுகிறது ஜிகர்தண்டா 2. அதன்படி முதல் நாளில் வசூலில் 2.5 கோடி ரூபாய் வசூலித்து டல் அடித்தாலும் இரண்டாவது நாளில் 4.86 கோடி ரூபாயும் மூன்றாவது நாளில் 7. 2 கோடி ரூபாயும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

 இதன் காரணமாக மூன்று நாட்கள் முடிவில் ஜிகர்தண்டா 2 மொத்தம் 14 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் படமானது 4 கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் இதனால் மொத்தமாக இதுவரை 19 கோடி ரூபாய்வரை ஜிகர்தண்டா 2 வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Advertisement

Advertisement

Advertisement