• Oct 30 2024

பாக்கியா குடும்பத்தினர் முன்னாடி கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா- ஜெனி வீட்டுக்கு போன செழியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா மசாலா கம்பனி நடத்திய வீட்டைக் காலி பண்ணச் சொன்ன விஷயத்தை ராமமூர்த்தி வந்து சொன்னதால் ஈஸ்வரி அதுவும் போய் விட்டதா எனத் திட்டுகின்றார். அடுத்து என்ன செய்யப்போறோம் என்று குழப்பத்தில் பாக்கியா இருக்கின்றார். அப்போது செல்வி பாக்கியாவை ஆறுதல்ப்படுத்துகின்றார்.


தொடர்ந்து பாக்கியா பழனிச்சாமியிடம் வந்து விஷயத்தைச் சொல்கின்றார். மேலும் பாக்கியா ஏதாவது ஆடுர் வந்தால் தனக்கு எடுத்துத் தரும்படி சொல்கின்றார். இதனால் பழனிச்சாமியும் பாக்கியாவை ஆறுதல்ப்படுத்துகின்றார்.

பின்பு பாக்கியா தன்னுடைய கம்பெனி பொருட்கள் எல்லாம் வீட்டில் இறக்கி வைக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகின்றார். தன்னுடைய கார் நிறுத்தும் இடத்தில் எதற்காக இந்தப் பொருட்களை வைக்கிறீங்க என்று கேட்கின்றார்.அப்போது எழில் காரை வெளியில் விடுங்க என்கின்றார். வீட்டுக்குள் சென்றதும் ராதிகாவும் நம்ம வீட்டில வெளில தானே காரை விடுறீங்க,அது ஒன்றும் நடக்காது,நீங்க வெளிலையே விடுங்க என்று சொல்கின்றார்.


அங்கு வரும் ஈஸ்வரியும் ராதிகா கான்டீனை விட்டு பாக்கியாவை வெளியேற்றியதால் தானே அவளுக்கு இந்த நிலமை வந்திருக்காது என்று சொல்கின்றார்.இதனால் பாக்கியாவும் ராதிகாவும் ஒன்று சேர்ந்து தன்னை வீட்டை விட்டு அனுப்பிடுவாங்களோ என்ற குழப்பத்தில இருக்கின்றார் 

மறுபுறம் செழியன் ஜெனி வீட்டுக்குச் சென்று தான் செய்தது தப்பு என்று சொல்ல ஜெனியின் அம்மா செழியனின் பேச்சைக் கேட்காது அவரை வீட்டு விட்டு போகச் செல்லுமாறு சொல்கின்றார். வீட்டுக்கு வந்த செழியன் கோபியிடம் சொல்லி அழுகின்றார். இதைக்கேட்ட பாக்கியாவும் கவலையில் இருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் பாக்கியாவுக்கு கோபி அட்வைஸ்ட் பண்ணிக் கொண்டிருக்க, அங்கு வரும் ராதிகா எங்களுடைய பிஸ்னஸே தண்ணீர்ல மூழ்கப் போகுது அதுக்குள்ள நீங்க அட்வைஸ்ட் பண்ணுறீங்களா என்று கேட்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


















Advertisement