• Dec 21 2024

மும்பையில் ஸ்டைலாக சுற்றும் ஜெயம் ரவி.. பின்னணி காரணம் என்ன தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்து தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றார்கள். ஜெயம் ரவி ஆர்த்தியுடன் வாழ்ந்த போது அவர் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார் என்று தற்போது பலரும் மனம் திறந்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் தான் ஜெயம் ரவி. இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதளவில் எமோஷனல் ரீதியாகவே காணப்படும். அத்துடன் திரில்லர் படங்கள் நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார் ஜெயம் ரவி.

சமீபத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாகவே தோல்வியை சந்தித்தன. அதில் இறுதியாக வெளியான சைரன் திரைப்படம் மட்டும் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனாலும் தற்போது வெளியான கருத்துக்களின் படி அந்த படங்கள் தோல்வி அடைந்த படங்களாக அவருடைய மாமியாரால் கணக்கு காட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால் ஜெயம் ரவி கேள்வி எழுப்பியதாகவும், பல சர்ச்சைகள் உருவாவதற்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தற்போது ஜெயம் ரவி மும்பையில் சிங்கிளாக சுற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கூலாக ஸ்டைலாக ஜெயம் ரவி வருகின்றாரே என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், ஜெயம் ரவி எதற்காக மும்பை சென்றார் என்று விசாரிக்கப்பட்டபோது அங்கு தனியாக ஆபீஸ் போடப்போகின்றாராம். அது மட்டும் இல்லாமல் பாலிவுட் ப்ரொடியூசர்களை சந்தித்து படங்களில் நடிக்க முயற்சி செய்யப் போவதாக சொல்லப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் ஜெயம் ரவி மும்பை சென்று உள்ளதாக தற்போது தகவல்கள் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement