• Jan 19 2025

மனோஜை வெளுத்து வாங்கிய முத்து.. சந்தேகத்தை ஏற்படுத்திய மீனா? பீதியில் ரோகிணி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில்  ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி சிக்குவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே காணப்படுகின்றது. தற்போது அதுக்கேற்ற வகையில் ரோகிணியை மிரட்டிய பிஏ மனோஜை சாமியார் வேடத்தில் சந்திக்கின்றார். மேலும் மனோஜ் பற்றி சில விஷயங்களை சொன்னதோடு அதில் முத்துவை மாட்டி விடுகின்றார். அதன் பின்பு ரோகிணியிடம் 30 லட்சத்தை ரெடி பண்ணுமாறு சொல்லி அனுப்புகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ் தன்னை லெட்டர் தந்து  மிரட்டியது முத்து தான் என நினைத்து விஜயாவிடம் சொல்லி கத்துகின்றார். மீனா அவர் அப்படி செய்ய மாட்டார் என்று சொல்லியும் கேட்கவில்லை. இதனால் விஜயா முத்து மீனாவை வீட்டை விட்டுப் போகுமாறு சொல்லுகின்றார்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் இந்த விஷயத்தை அறிந்து கொண்ட முத்து நேராக வீட்டிற்கு வந்து மனோஜை அடிப்பதற்கு முனைகின்றார். ஆனாலும் அவரை மீனா தடுக்கின்றார்.


அதன் பின்பு இந்த லெட்டரை கொடுத்தது மனோஜ் பார்த்த சாமியாராக தான் இருக்கும் என மீனா முத்துவிடம் சொல்லுகின்றார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

எனவே இதை வைத்து மனோஜ், முத்துவும் பிஏவை தேடி பிடித்து அவரிடம் உண்மையை வாங்குவார்களா? இல்லை என்றால் ரோகிணி இதையும் சமாளித்து விட்டு தப்பி விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement