பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நிரஞ்சன் இயக்கும் புதிய திரைப்படம் தான் 'மிஸ்டர் பாரத்'
1986 களில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படத்தின் பெயரினை ரீ நேமிங் செய்துள்ளமையினால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் இப்படத்தில் யூடியூப் மூலம் பிரபலமான பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.குறித்த போஸ்ட்டர் வெளியாகிய சிலமணி நேரங்களில் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது குறித்த போஸ்ட்டரினை லோகேஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதுடன் குறித்த பதிவில் " இந்த அழகான இளம் திறமைகளுடன் மற்றொரு புதிய தொடக்கம்"என குறிப்பிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Here’s the First Look of #MrBhaarath 🤗🤗❤️❤️❤️
Yet another new beginning with these lovely young talents ❤️❤️✨ https://t.co/IQEMzW9UDD
Listen News!