• Oct 08 2024

தேவரா படம் எதிர்பார்த்தபடி இல்ல; NTRன் கட்டவுட்டை கொளுத்திய ரசிகர்கள் ?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

ஜீனியர் என்டிஆரின் முப்பதாவது படமாக தேவரா திரைப்படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகி உள்ளது. என்டிஆருக்கு தெலுங்கில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் மிகப் பெரிய பேன்ஸ் பேஜ் காணப்படுகின்றது. இதனால் இந்த திரைப்படத்தை பலரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பார்த்து வருகின்றார்கள்.

தென்னிந்திய சினிமாவில் முதல் முதலாக ஜான்வி கபூர் இந்த படத்தின் ஊடாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் சையத் அலி கான் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இந்த படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சி நடக்க இருந்த போது ஏராளமான ரசிகர்கள் புகுந்ததால் ரகளை ஏற்பட்டு நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்து இருந்தார்கள். ஆனால் அவை அனைத்தையும் கொரட்டாலா சிவா தவிடுபொடியாக்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த படத்தில் ஜீனியர் என்டிஆரின் நடிப்பும் அனிருத் இசையும் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஜான்வி கபூரின்  நடிப்பு, அழகு உள்ளிட்டவை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


இந்த நிலையில், ஐதராபாத்தில் படத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் வெளியில் உள்ள என்டிஆரின் கட்டவுட்டை  கொளுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதன் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

படம் எதிர்பார்த்தபடி இல்லை என்றால் கட்டவுட்டை கொளுத்துவார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் இது ரசிகர்களின் செயல் இல்லை இது ஒரு விபத்து என்று கூறப்பட்டது. எது உண்மை என திரையரங்க நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement