• Dec 21 2024

இந்திய அளவில் முதலிடம்... ஜவான் வசூலை முறியடித்த திரைப்படம்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ஸ்ட்ரீ1 தொடர்ந்து 2024ஆம் ஆண்டு ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் பாலிவுட் முன்னணி நட்சத்திரம் ஷ்ரத்தா கபூர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திருப்பதி, தமன்னா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

 

நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் இந்தியில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் படைத்தது. அந்த வசூல் சாதனையை தற்போது ஸ்ட்ரீ 2 முறியடித்துள்ளது. 


இந்தி பாக்ஸ் ஆபிஸில் ஜவான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, தற்போது நம்பர் 1 வசூல் செய்த இந்தி திரைப்படம் என்கிற பெருமையை ஸ்ட்ரீ 2 திரைப்படம் கைப்பற்றியுள்ளது. மேலும் ஸ்ட்ரீ 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 800 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 






Advertisement

Advertisement