• Jan 16 2026

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் மன்னிப்பு கேட்ட தல அஜித்! நடந்தது என்ன?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்குமார் திரைப்பட படப்பிடிப்புகளில் நடிக்கும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், விமான நிலையத்திற்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது. 


சமீபத்தில் கூட நடிகர் கவின் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் அஜித்குமாரை சென்னை விமான நிலையத்தில் பார்த்து அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமுக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார். அதில், "நான் ஒருமுறை அஜித் சாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். 


நான் யார் என்றே தெரியாமல் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது என் மனைவி அங்கு வந்து நான் யார் என்ன செய்கிறேன் என்று கூறினார். அதனை கேட்டு என்னை தனியாக அழைத்து சென்று அஜித் மன்னிப்பு கேட்டார். பெரிய ஹீரோவாக இருக்கும் அவர் நான் பேசிய ஒரே காரணத்திற்காக என்னை மதித்து பேசினார்" என்று சந்தோஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார் அன்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.    

Advertisement

Advertisement