• Jan 19 2025

ஐயர் ஆத்து பொண்ணுக்கு அசைவம் மீது ஆசை... நயன்தாராவின் அன்னபூரணி திரைப்பட முழு விமர்சனம்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் ஜவான் மற்றும் இறைவன் திரைப்படங்கள் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் அன்னபூரணி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது  என முழு விமர்சனம் பார்ப்போம் வாங்க.


சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர் மற்றும் வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் ஐயர் வீட்டு பெண்ணாக இருக்கும் நயன்தாரா புத்தகத்திற்குள் அசைவ உணவு குறிப்புகளை பார்த்துக் கொண்டிருப்பது போல் வெளியான அந்த வீடியோ பயங்கர வைரலானது. அந்த விடீயோக்களை ரசிகர்கள் இணையத்தில் சரமாரியாக பகிர்ந்தனர்.


மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா துருதுருவென இருக்கும் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார். சமீப காலமாக அவர் ரொம்பவும் சீரியஸான கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். அதனாலயே இப்படத்தின் ரிலீஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்ன என்ற தகவல் கசிந்துள்ளது. அதாவது ரொம்பவும் ஆச்சாரமான ஐயர் வீட்டு பெண்ணாக இருக்கும் நயன்தாராவுக்கு மிகப்பெரிய ஆசை ஒன்று இருக்கிறது. என்னவென்றால் ஆண் ஆதிக்க சமையல் உலகில் தானும் ஒரு சமையல் நிபுணராக மாற வேண்டும் என்பதுதான்.


அதற்காக அவர் அசைவ உணவுகளையும் சமைக்க முயற்சிக்கிறார். இதில் அவர் சந்திக்கும் போராட்டம் என்ன? அவருடைய முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பது தான் படத்தின் முழு கதை. மேலும் ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய் நயன்தாராவுடன் இப்படத்தில் இணைந்திருப்பதும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


அந்த வகையில் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாகி இருக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் அன்னபூரணியாக கலக்க வரும் நயன்தாராவுக்கு இப்படம் வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement