• Jan 19 2025

விசித்ரா கதை கேட்டு மனமுடைந்த மகன்... மறக்க நினைக்கிறேன் முடியவில்லை... விசித்ரா சொன்ன கதையால் வீட்டில் நடந்த சம்பவம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில் தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் குறித்து போட்டியாளர்கள் கூறினார்கள். அதில் பிக்பாஸ் 7 விசித்ரா பேசும்போது, தான் நடிப்புக்கு வந்த புதிதில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் ஒருவர் தனது அறைக்கு அழைத்தார் என ஒரு கதையை சொல்லி இருந்தார்.


படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் இதனை இயக்குனரிடம் கூறியபோது அடித்துவிட்டார் என்று கூறியிருந்தார். அவர் யாரை கூறினார், எப்போது அந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல் பரவி விட்டது. அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஏன் எதையும் தட்டி கேட்கவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 


இந்த நிலையில் நடிகை விசித்ராவின் கணவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர்,  இந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம், அதை மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கும் போது விசித்ரா ஏன் இதை சொன்னார் என்பது தெரியவில்லை, எனக்கே பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு கல்லூரிக்கு கூட போகவில்லை, மனமுடைந்து விட்டான், இனிமேல் தான் நான் அவரிடம் இதைப் பற்றி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். 

Advertisement

Advertisement