• Jan 18 2025

ஏழை மக்களின் குரல் மட்டும் உங்களுக்கு எப்போதும் கேட்காது- நடிகர் அஜித்தை மோசமாக விமர்சித்த பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை நிலைகுலைந்து போயிருக்கிறது. புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மழை காரணமாக சென்னை வெள்ளக்காடானது. ஒருபக்கம் தேங்கிய மழை நீர், மறுபக்கம் ஏரி உடைந்து வெளியேறிய நீர் என மக்கள் ரொம்பவே சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையின் முக்கியமான சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் குறைந்து விட்டாலும்,சில இடங்களில் தண்ணீர் இன்னும் வடியவே இல்லை.தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். 


 இதற்கிடையே நேற்று முன் தினம் காரப்பாக்கத்தில் விஷ்ணு விஷால் குடும்பமும், தனது தாயின் சிகிச்சைக்காக அங்கு இருந்த பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு அவர்கள் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் படகின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்த போட்டோ வெளியானது.

விஷ்ணு விஷால் மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.அதில்,"எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார்" என குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் அஜித்குமாரை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும் ஆனால் உங்களை விரும்பும் டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்)" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Advertisement

Advertisement