நடிகர் சங்கத்தின் தலைவராக மாறிய விஜயகாந்த் தமிழ் சினிமாவின் கேப்டனாகவே சிறப்பாக செயல்பட்டார். பல்வேறு நட்சத்திரங்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் அவர் நடத்திய கலை நிகழ்ச்சிகள் எல்லாம் இன்றளவும் மற்ற நடிகர் சங்க தலைவர்களால் சாத்தியமாகாத ஒன்றாகவே உள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடித்து வந்தனர். ஆனால், கடைசி வரை மற்ற இடமெல்லாம் எதுக்கு நமக்கு தேவையில்லாத விஷயம். நம்ம ரசிகர்களுக்கான நம்ம மக்களுக்கான படங்களை கொடுப்போம் என நடித்தார். அவரது படங்களில் இந்தி நடிகர்களை வில்லன்களாக நடிக்க வைத்து மாஸ் காட்டினார்.
நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட இருந்ததோடு தொடர்ந்து சிகிச்சைகளையும் பெற்று வந்தார்.இருப்பினும் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த வகையில் நடிகர் டி.ராஜேந்தரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து டி.ராஜேந்தர் விஜயகாந்த் மறைவு தனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளதாக கூறினார்.அப்பா நான் வெளிநாட்டில் இருக்கேன், என்னால வர முடியாது நீங்க எப்படியாவது அண்ணன் விஜயகாந்தை நேரில் சென்று பார்த்து விட்டு வந்துடுங்க அப்பா என என்
சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் சிம்புவுக்கு பல உதவிகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரை ஒரு நடிகராகவோ, அரசியல் தலைவராகவோ எல்லாம் நினைத்து இங்கே பார்க்க வரவில்லை. அதையெல்லாம் தாண்டி விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். அந்த மனிதருக்கு செலுத்த வேண்டிய இறுதி கடமையை செலுத்தவே வந்தேன் என டி. ராஜேந்தர் பேசியுள்ளார்.
Listen News!