• Oct 30 2024

டிசம்பர் என்றாலே டேஞ்சர் தான், அன்றே கணித்த விஜயகாந்த்- தான் இறக்கப்போவது முதலே தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த் இன்று காலை காலமானர். நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மக்களின் பார்வைக்காவும், அஞ்சலி செலுத்துவதற்காகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.


மேலும் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோமே என்றும் கதறிக்கொண்டிருக்கின்றனர்.இவரின் பூத உடல் நாளைய தினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இந்த நிலையில் இவரின் உடல் நாளைய தினம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க விஜயகாந்த் டிசம்பர் என்றாலே டேஞ்சர் என்று சொன்ன வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில் டிசம்பரில் தான் புயல் வரும் டிசம்பரில் தான் பிரபலங்கள் பலர் இறக்கின்றனர். எனவே டிசம்பர் என்றால் டேஞ்சர் தான் என்று அவரே சொன்ன வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement