• Apr 17 2026

விஜயகாந்தின் உடலைப் பார்த்து கண்ணீர் வடித்த நடிகர் விஜய்- தாங்கிப்பிடித்த பிரேமலதா- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கேப்டனாகவே விளங்கியவர் நடிகர் விஜயகாந்த். ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடித்து வந்தனர். 

ஆனால், கடைசி வரை மற்ற இடமெல்லாம் எதுக்கு நமக்கு தேவையில்லாத விஷயம். நம்ம ரசிகர்களுக்கான நம்ம மக்களுக்கான படங்களை கொடுப்போம் என நடித்தார். அவரது படங்களில் இந்தி நடிகர்களை வில்லன்களாக நடிக்க வைத்து மாஸ் காட்டினார்.


நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட இருந்ததோடு தொடர்ந்து சிகிச்சைகளையும் பெற்று வந்தார்.இருப்பினும் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்தோடு விஜயகாந்தின் உடலைப் பார்த்து கண்ணீர் வடித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement