• Sep 03 2026

தியேட்டர்களில் கோஸ்ட் வேடத்தில் உலாவந்த ஐடி ஊழியர்கள்! ஏன் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் தங்கலான், டிமான்ட்டி காலனி 2 மற்றும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன .

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகவும் திரில்லர் படமாகவும் காணப்படுவது தான் டிமாண்டி காலனி 2. இதன் முதலாவது பாகமே ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு உள்ளானது . தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களால் அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது .

டிமான்ட்டி காலனி 2  திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


இந்த நிலையில், டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்ப்பதற்கு ஊழியர்கள் கோஸ்ட் மாஸ்க் அணிந்து திரையரங்கிற்குள் சென்று உள்ளார்கள்.  தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது, அருள்நிதி நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள், அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐ.டி ஊழியர்களுக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன் போதே ஊழியர்கள் கோஸ்ட் மாஸ்க் அணிந்து சென்றுள்ளார்கள்.

Advertisement

Advertisement