• Nov 22 2025

அதெல்லாம் Non Sense மாதிரி தோணுது.. பார்வதியின் மனநிலை பிக்பாஸில் இப்படி மாறிடுச்சா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் தற்போது மெல்ல மெல்ல போட்டியாளர்களின் உண்மையான முகங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. தனிப்பட்ட துன்பங்கள், மனஉணர்வுகள், வாழ்க்கைப் பயணங்கள் அனைத்தையும் பகிரும் இந்த பிக்பாஸ் வீடு, பார்வையாளர்களுக்கு ஒரே நேரத்தில் தகவல், உணர்வு, மற்றும் திருப்பங்கள் தருகிறது.


இந்தக் கணங்களில், மிகவும் நேர்மையாகவும் திறமையாகவும் பேசிக் கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் தான் VJ பார்வதி. இந்நிலையில் பார்வதி பிக்பாஸ் வீட்டிற்குள் பகிர்ந்த உருக்கமான கருத்து அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது. 

பார்வதி பேசும் போது, "குக்கு வித் கோமாளி ஷோவில கூட எனக்கு செட் ஆகல. என்னால காமெடி எல்லாம் பண்ண முடியுது. ஆனா மத்தவங்களைப் போல வம்படியா காமெடி பண்ண முடியாது. அதெல்லாம் பார்த்தாலே என்னங்கடா non sense என்று தான் தோணுது. அது போல தான் பிக்பாஸ் வீட்டிலயும் இருக்கு.." என்று கூறியுள்ளார்.


பார்வதியின் இந்த மனம் திறந்த பேச்சு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஒளிபரப்பான பின்பு, சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்களிடையே பரவி வருகின்றது. 

Advertisement

Advertisement