• Jan 19 2025

பூர்ணிமாவை அவாய்ட் பண்ண இது தான் காரணமா? இந்துஜாவின் நண்பர் பகிர் பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ்  சீசன் 7ல் ஒருசில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டிற்கு பார்க்கிங் திரைப்படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண்,  ஹீரோயின் இந்துஜா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். எனினும், இந்துஜாவின் உயிர் தோழியான பூர்ணிமாவை பெரிதாக கண்டுகொள்ளாதது பூர்ணிமா ரவியை மனமுடைய வைத்திருக்கிறது.  

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் 'மேயாத மான்' படத்தின் மூலம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒருவர். இவர் இதுவரை தளபதி விஜய்யுடன் 'பிகில்' படத்திலும், தனுஷுடன் செல்வராகவனின் 'நானே வருவேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வார புதிய திரைப்படமான 'பார்க்கிங்' படத்தில் இந்துஜா முக்கிய பெண் நாயகி. இப்படம் ஏற்கனவே பத்திரிகை நிகழ்ச்சிகளில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது.


இதற்கிடையில், முன்னாள் 'பிக் பாஸ்' போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் 'பார்க்கிங்' விளம்பரத்திற்காக 'பிக் பாஸ் தமிழ் 7' இல் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய போட்டியாளர் பூர்ணிமா பின்னர் தனது நெருங்கிய கல்லூரி தோழியான இந்துஜா தன்னை புறக்கணித்ததாக தனது ஏமாற்றத்தை மாயாவிடம் பகிர்ந்து கொண்டார். இதை தொடர்ந்து இந்துஜாவின் சமூக வலைத்தளங்களை நோட்டமிட்ட ரசிகர்கள் அவர் பூர்ணிமாவை அன் ஃபாலோ செய்து விட்டார் என ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். 


இந்த நிலையில், நடிகை இந்துஜா பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமாவிடம் அப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதன்படி, மேலும் அவர் கூறுகையில்,

'பிக் பாஸ் வீட்டிற்கு வெளியிலிருந்து உள்ளே ஒவ்வொருவரும் போகும் போதே சொல்லி தான் அனுப்பப்படுகிறார்கள். அதாவது, உள்ளே உங்களுக்கு நண்பர்களோ தெரிந்தவர்களோ அல்லது நீங்கள் யாருக்கேனும் பேனாக இருந்தால் கூட அதை உள்ளே காட்டிக் கொள்ளக் கூடாது. வெளியே வந்து உங்களுடைய பீலிங்கை காட்டலாம்.

மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்கள் எல்லா போட்டியாளரிடமும் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதுபோல தான் நடந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்லி உள்ளே அனுப்பப்படுகிறார்கள். அந்த விதிமுறையை மீறக் கூடாது என்பதற்காக கூட இந்துஜா பூர்ணிமாவிடம் பேசாமல் வந்து இருக்கலாம்.


ஒருவேளை வெளியே வந்து பிறகு பூர்ணிமாவிடம் இந்துஜா இதற்கான விளக்கத்தை கொடுப்பார். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்கள் போகும்போது கூட இதுபோலத்தான் சொல்லி அனுப்பப்படுகிறது. அதனால் தான் பிரீஸ் டாஸ்க்கில் வீட்டிற்குள் வரும் உறவினர்கள் எல்லா போட்டியாளர்களிடமும் சகஜமாக பேசுவார்கள்' என மேலும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement