• Jan 18 2025

நடிகை விசித்ரா கதாநாயகியாக வராமல் போனதற்கு இந்த நடிகர் தான் காரணமா?- என்ன நடந்திச்சு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகை விசித்ரா.முத்து உள்ளிட்ட பல படங்களில் இவரது கேரக்டர் பேசப்பட்டது. தற்போது விறுவிறுப்பாக நடந்துவரும் பிக்பாஸ் தமிழ் 7 சீசனில் முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்திலேயே ஜோவிகாவின் கல்வி குறித்து பேசி, அதை விவாதத்திற்கு உள்ளாக்கினார். அடிப்படை கல்வியின் அவசியத்தை பேசி அனைவரையும் கவர்ந்தார். இந்த சீசனில் தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் தைரியமாக பேசும் அவரது நடவடிக்கைகள் அதிகமானவர்களை ஈர்த்தாலும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 


சினிமாவில் தான் சந்தித்த பல விஷயங்களையும் விசித்ரா வெளிப்படையாக பேசினார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.இந்த நிலையில் நடிகை விசித்ரா குறித்த ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.

கடந்த 2019ம் ஆண்டு மண்டகசாயம் என்ற டுவிட்டர் பக்கத்தில், தமிழ்ல முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது விசித்ரா, ஆனால் சத்யராஜ் மாமாவால அது போயிடுச்சு" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


இதற்கு நடிகை விசித்ரா, சத்யராஜ் சார் என் மேல மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்து இருந்தாரு.அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் வந்ததால நல்ல வேடங்களை என்னால் நடிக்க முடியாமல் போனது என உருக்கமாக பல அளித்திருந்தார்.   

Advertisement

Advertisement