• Jan 18 2025

இப்போ என் கைவசம் தொழில் இருக்கு, கவலை எதற்கு- குணசேகரன் பார்த்தால் என்ன ஆகிறது மேடம்- ஈஸ்வரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான, '5 ஸ்டார்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. இதை தொடர்ந்து, மாதவனுடன் எதிரி, சேரனுக்கு ஜோடியாக ஆட்டோகிராப், மற்றும் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ள கனிகா, தமிழில் ஜெனிலியா, சதா, ஸ்ரேயா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 


திருமணத்திற்கு பிறகும் மலையாளத்தில் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் கனிகா, தமிழில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும், 'எதிர்நீச்சல்' சீரியலில் ஈஸ்வரி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் இலங்கைக்கு சென்றுள்ளார்.

அங்கே ஆட்டோ ஓடும் வீடியோவை வெளியிட்டு,கைவசம் தொழில் இருக்கு என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.இந்த வீடியோவை வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement