• Jan 19 2025

எல்லோரும் சொல்லுறாங்க என்று தான் சொன்னேன்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் சொன்ன முக்கிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் இந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றதால் போட்டியாளர்களின் பெற்றோர், மற்றும் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய குடும்பத்தாருடன் அன்பை மாறிமாறிப் பகிர்ந்திருந்தனர். இது பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது.


மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தினேஷ் விசித்ரா,அர்ச்சனா ஆகியோர் தேர்வாகியுள்ளதோடு இந்த வாரம் சரவண விக்ரம் பிக்பாஸ் வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.வீட்டை விட்டு வெளியேறிய விக்ரம் தற்பொழுது பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

அதில், யார் மனசையும் நோகடிக்கக் கூடாது என்பதற்காக விக்ரம் பார்த்து பார்த்து தான் வார்த்தைகளை கவனமாக பேசி வந்தாரு, ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தற்கு பிறகு தான், பிரதீப் ஆண்டனிக்கு நடந்த விஷயத்தை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளா


அதாவது பெண்கள் எல்லோரும் சொல்லுறாங்க என்பதற்காககத் தான் அவரைப் பற்றி அந்த டைம்ல சொல்ல வேண்டியதாப் போச்சு, மற்றும்படி அவர் கிட்ட எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் பிரதீப்பிடம் போன் பண்ணிப் பேசி மன்னிப்பும் கேட்டிருக்கின்றார்.மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement