• Jan 20 2025

குழந்தை ஆணா? பெண்ணா? பலூன் சுட்டு விளையாடிய இர்பான் மீது பாய்ந்த வழக்கு! கம்பி எண்ணுவாரா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல  யூடியூபராக காணப்படும் இர்ஃபான் ஹோட்டல்களில் உணவு சாப்பிட்டு அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானர். இவர் ஆரம்பத்தில் ஆட்டோ ஓடிக்கொண்டே படித்து அதன் பிறகு தனது கிடைக்கும் நேரங்களில் யூடியூப் சேனலை ரன் பண்ணி கொண்டு வந்தார்.

ஆனால் இன்று தமிழ்நாட்டில் அதிக வருமானத்தை ஈட்டும் யூடியூபராக இவர் காணப்படுகிறார். இவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றார்கள்.

அது மட்டுமின்றி தேள், பாம்பு, முதலைக்கறி என உள்ளிட்ட உயிரினங்கள் தொடர்பாகவும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானர். தற்போது விஜய் டிவியில் இடம்பெறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டும் இன்றி சினிமா பிரபலங்களுடனும்  கலக்கி வருகிறார்.


கடந்த ஆண்டு இர்பானுக்கு திருமணம் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், துபாய்க்கு சென்று என்ன குழந்தை என பார்த்தது மட்டுமில்லாமல் அதனை தனது youtube இல் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைத்தளங்களில் அறிவித்த  யூடியூபர் இர்ஃபானுக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவமனை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement