தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த பாகம் என எடுப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே கடந்த காலத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டு சமீபத்தில் தயாராகியுள்ளது.
1996 இல் கமலகாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டு 24 வருடங்கள் கழித்து வெளியாக உள்ளது. குறித்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் புது அப்டேட் கிடைத்துள்ளது.
இந்தியன்-2 இன் 1வது சிங்கிள் "PAARAA" இன் ப்ரோமோ இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் எனவும் , முழுப் பாடல் நாளை 5 மணியளவில் வெளியிடப்படும் எனவும் இந்த பாடலுக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளதோடு கவிஞர் பாவிஜய் இந்த பாடலை எழுதியுள்ளார் எனவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா தெரிவித்துள்ளது.
                             
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!