• Jan 20 2025

ஆர்.கே பாலாஜி சைக்கோவா? சீரியல் கில்லரா? பயங்கரமாக வெளியான போஸ்டர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதற்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குள் நடிகராக நுழைந்தவர் தான் ஆர்.ஜே பாலாஜி.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். குறித்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த நிலையில், இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடும் ஆர்.ஜே பாலாஜியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

அதன்படி வெளியான போஸ்டரில் ஆர்.கே பாலாஜி ரத்தக் கறையுள்ள கத்தியினால் கேக் வெட்டுவது போலவும், பாரில் அமர்ந்திருக்கும் அவரது உடையில் ரத்தக்கறை படிந்துள்ளது  போலவும் காணப்படுகின்றது.


மேலும் குறித்த போஸ்டரில் கேக்குக்கு அருகில் துப்பாக்கியும் சிறிய சுத்தியலும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது அருகில் மதுபான போடலும் உள்ளது.

இந்த போஸ்டரில் ஆர்.கே பாலாஜி நக்கலான வெறியுடன் சிரிப்பது போலவும் ஒரு கையில் மெழுகுவர்த்தியும் ஒரு கையில் லைட்டருடனும் உள்ளார்.

ஆர்.கே பாலாஜியின் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், இது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் இவர் சீரியல் கில்லராக இருப்பாரோ என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement