கடந்த 2000ம் ஆண்டு எஸ். ஜே சூர்யா இயக்கத்தில், தளபதி விஜய், ஜோதிகா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் குஷி. இந்த படம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் எஸ். ஜே சூர்யா குஷி 2 படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளனர்.
அதன்படி அதன் தயாரிப்பாளர் கூறுகையில் , இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் குஷி படத்தை பார்த்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். ஆரம்பத்தில் எடிட்டர் விஜயன் என்னிடம் வாலி படம் நன்றாக இருக்கின்றது. இதனால் அஜித் சார் சூர்யாவுக்கு பைக் வாங்கி கொடுத்தார் என்று சொன்னார்.
நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன். பின்பு நாயகனாக யாரை வேண்டுமென்றாலும் போடுங்கள் ஆனால் இயக்குநர் சூர்யாவாக தான் இருக்க வேண்டும் என்றேன்.
அதன் பின்பு விஜயிடம் கதையை கூறினோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சூர்யா தான் இயக்கினார். அந்த நேரத்தில் விஜய் டாப் ஹீரோவாக இருந்தார். ஆனால் இந்த படத்தில் சண்டை காட்சிகள் இல்லை, வையுங்கள் என்று கூறினார். எனினும் சூர்யா இது லவ் ஸ்டோரி வைக்க முடியாது என்றார். அதன் பின்பு பேசி ஒரு காட்சி வைத்தோம்.
எனினும் இந்தியன் படமாக மாஸ் படமாக இல்லையே, காதல் கதையா இருக்கே என்று ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால் முதல் காட்சிக்குப் பிறகு சூர்யா படம் ஹிட் என்று கூறினேன். வைரமுத்து சாரும் பாராட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில் பார்ட் 2 படங்கள் ட்ரெண்டிங்காகி வருகின்றன. அதில் குஷி 2 படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனையும் சூர்யா இயக்க வேண்டும். அதில் விஜய் நடித்தாலும் சரி, அவருடைய மகன் நடித்தாலும் சரி அல்லது வேறு யார் நடித்தாலும் சரி சூர்யா தான் இயக்குவார் என்றார்.
அதே நேரத்தில் எஸ். ஜே சூர்யாவிடம் குஷி படத்தை விஜய் ஜோதிகாவை வைத்து எடுத்தது போல குஷி 2 படத்தை விஜய் மகனையும், ஜோதிகா மகளையும் வைத்து எடுப்பீங்களா என கேட்கப்பட்டது. அதற்கு அதெல்லாம் அமைந்தால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
Listen News!