• Oct 30 2024

முரட்டு சிங்கிளாக வாழும் பிரேம்ஜி திருமணம் முடித்தது உண்மை தானா?- இதுவரை அறியாத ரகசியங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் பலர் இருக்கின்றனர்.இவர்களில் இளையராஞா கங்கை அமரன் யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரவு போன்ற திரையுலகப் பிரபலங்களின் குடும்பத்தில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் பிரேம்ஜி. முரட்டு சிங்கிள் என்று பெயர் எடுத்த இவர் கங்கை அமரனின் மகன் ஆவார்.

இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதோடு தனது அண்ணனான வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


1979 இல் பெப்ரவரி 26ல் பிறந்த இவர் சென்னையில் தான் படித்தாராம் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மியூசிக்கில் ஆர்வம் காட்டினாராம். தொடர்ந்து புன்னனை பூவே படத்தில் சின்ன காரெக்டரில் நடித்திருந்தாராம். தொடர்ந்து கண்ட நாள் முதல் படத்திலும் சிறுகதாப்பாத்திரத்தில் நடித்தாராம்.


அதன் பின்னர் மீண்டும் இசையமைப்பாளராக மாற உருவெடுத்த இவர் நடிகர் சிம்புவை சந்தித்ததோடு அவருடன் இணைந்து வல்லவன் திரைப்படத்திலும் நடித்திருந்தாராம். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தொடர்ந்து சென்னை 6லட்சத்து 28 படத்திலும் மாசு என்கிற மாசிலாமணி ,கோவா ,பிரியாணி, மங்காத்தா ,மாநாடு ,பிரின்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

தொடர்ந்து நடிப்பிம் இசையிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றாராம். திருமணம் செய்வதை விட சிங்கிளாக இருந்து சந்தோசமாக வாழ ஆசைப்படுகின்றாராம். இந்த நிலையில் இவர் பிரபல தொகுப்பாளினி ஒருவருடன் காதலில் இருந்ததாகவும் பின்னர் அவரை பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.


இந்த நிலையில் இவர் தற்பொழுது பிரபல பாடகி வினிதா கூட கொஞ்ச நாளாக டேட்டிங்கில் இருந்த இவர் தற்பொழுது அவரைத் திருமணம் செய்து விட்டதாகவும் இதனை வினிதா என் புருஷன் திரும்பக் கிடைச்சிட்டாரு என்றும் பதிவிட்டிருந்தார்.ஆனால் இதனை பிரேம்ஜி தரப்பிலிருந்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று தான் கூறவேண்டும். அத்தோடு விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது.

Advertisement