• Nov 20 2024

மூச்சு முட்டும் புழுக்கமா? ஊர் விலகி அமைதிக்கு உதவிடுங்கள்! பார்த்திபன் திடீர் ட்விட்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ. ஆர் ரகுமான் வாழ்க்கையில் திடீரென புயல் வீச ஆரம்பித்துள்ளது. ஏ. ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு நேற்றைய தினம் இரவு தான் ஏ.ஆர் ரகுமானை பிரிவதாக அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசை சாம்ராஜ்ஜத்தை உருவாக்கியவர் ஏ. ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் இவர் அமைத்த மெட்டுக்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தது இன்றும் பலருக்கும் விருந்தாக ஏ.ஆர் ரகுமானது இசை காணப்படுகிறது.

இவ்வாறு புகழின் உச்சத்தில் காணப்படும் ஏ. ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இவர்களுடைய திருமண பந்தத்தில் திடீரென இப்படி ஒரு விரிசல் ஏற்பட காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

d_i_a

இதைத்தொடர்ந்து ஏ. ஆர் ரகுமானும் 30 ஆவது திருமண விழாவை கொண்டாடுவோம் என எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. எங்களுக்கு பிரைவேசி வேண்டும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் போட்டிருந்தார்.


இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏ. ஆர் ரகுமான் விடையத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் பிறக்கும் ஒரு நாதமே.. குடைக்குள் மழை நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க இசையே பாடியது.. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.. நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதே சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழி உள்ளதா என சம்பந்தப்பட்டவர்கள் ஆராயலாம்.. ஊர் கூடி உறவை கொண்டாடி வழி அனுப்புதல் போலவே.. ஊர் விலகி 'பிரிவு' என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement