• Dec 07 2024

ரியா தியாகராயன் மீண்டும் வெளியிட்ட எமோஷனல் வீடியோ! ரசிகர்கள் கடும் வேதனை

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கோலாக்கலமாக ஆரம்பிக்கப்பட்டு 45 நாட்களை கடந்துள்ளது. இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்கு ஒரு கோடை போட்டு அந்த பக்கம் ஆண் போட்டியாளர்களும் இன்னொரு பக்கம் பெண்  போட்டியாளர்களும் தனித் தனியாக விளையாடி வருகின்றார்கள்.

இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் நாளிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, சச்சரவுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. 18 போட்டியாளர்கள் பங்கு பற்றி இருந்தார்கள். அதன் பின்பு ஆறு வைல்ட் கார்ட் என்ட்ரிகள் பிக் பாஸ் வீட்டுக்கள் நுழைந்தனர்.

d_i_a

அதே வேளை முதலாவது வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர் வெளியேறியிருந்தார். அவரை தொடர்ந்து அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறினார்கள். இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரியா தியாகராஜன் வெளியேறி இருந்தார்.


இவர் மக்களால் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து மிகவும் எமோஷனல் ஆகி என்னை ஏன் எலிமினேட் பண்ணீங்க? நான் நியாயமா தானே விளையாடினான். பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த 14 நாட்களில் ஒரு நாள் கூட சோர்வாக இருந்ததில்லை. கேட்க வேண்டிய இடத்தில் கேள்விகளை கேட்டு நியாயமாக நடந்து கொண்டேன். எதற்காக என்னை எலிமினேட் பண்ணினீர்கள் என்று மனம் நொந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக வெளியேறிய ரியா தியாகராஜன் பதிவிட்ட வீடியோ பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. தற்போது மீண்டும் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றியை தெரிவித்து உள்ளார். 

Advertisement

Advertisement