• Apr 02 2025

அருணுக்கு ஏற்கனவே திருமணம் முடிஞ்சிருச்சா? அவரை புருஷனென சொந்தம் கொண்டாடும் பெண்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் தான் அருண் பிரசாத். இவர் அந்த சீரியலில் பாரதியாக நடித்து மக்கள் மனதை வென்றார். அதன் பின்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கு பற்றினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்கள் அமைதி புறமாக இருந்த அருண், நாளடைவில் சண்டை சேவலாக மாறினார். அதிலும் முத்துக்குமரனுடன் அதிகம் சண்டை போட்டு தனது பெயரை டேமேஜ் செய்தார். ஆனாலும் அதன் பின்பு தன்னை மாற்றிக் கொண்டு விளையாடிய அருண் இறுதியில் எலிமினேட் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்து தனது காதலியாக அர்ச்சனாவை அறிமுகம் செய்தார். அர்ச்சனாவும் அருணும் கடந்த சில ஆண்டுகளாகவே ரகசியமாக காதலித்து வருகின்றார்கள். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், அருண் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், அருண் பிரசாத் தன்னுடைய கணவர் என இன்ஸ்டாவில் பெண் ஒருவர் சொந்தம் கொண்டாடி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இன்ஸ்டாவில் சுபத்ரா அருண் என்ற ஐடியில் இருந்து அருனின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றார்.

அது மட்டும் இல்லாமல் அவருடைய பயோவில் 'என் அர்ஜுன்' எனக் குறிப்பிட்டு அருணின் ஐடியையும் டேக் செய்துள்ளார்.  தாங்கள் ஐந்து வருடமாக காதலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அருணை செல்ல பெயர் கொண்டு பதிவிட்டுள்ளதோடு அவருடைய அம்மாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அத்தை என குறிப்பிட்டுள்ளார்.


இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதோடு இதை பார்த்த ஒரு சிலர் அருணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றார்கள். 

எனவே அது அருணின் ரசிகையா அல்லது மனைவியா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அர்ச்சனாவுக்கும் அருணுக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement