• Jan 19 2025

நடிகர் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையின் பெறுமதி இத்தனை லட்சமா?- யார் செய்தது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி  உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில்  வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.


இதையடுத்து விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன்  72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் மறைந்து மூன்று நாட்கள் ஆன போதும் அவரை மக்கள் மறக்காமல் நினைவு கூர்ந்து அவரின் பழைய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதில் கேப்டன் என இரண்டு புறமும் எழுதப்பட்டு இருந்தது.


"புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்" என பெயர் மற்றும் அவர் பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த சந்தன பேழை பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. எம்ஜிஆர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களுக்கு செய்து கொடுத்த அதே நபர் தான் விஜயகாந்துக்கும் செய்து கொடுத்து இருக்கிறார்.சந்தன பேழை செய்ய 1.25 லட்சம் ரூ. முதலில் கேட்டாராம் அவர். ஆனால் அதன் பின் 1 லட்சம் ரூபாய்க்கு இறுதியாக செய்து கொடுத்தாராம்.  


Advertisement

Advertisement