• Jan 19 2025

கல்யாணத்துக்கு பிறகு விஜயகாந்த் முதன் முதலாக வாங்கித் தந்த கிப்ட் இது தான்- பிரேமலதா சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி  உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில்  வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.


இதையடுத்து விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன்  72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் மறைந்து மூன்று நாட்கள் ஆன போதும் அவரை மக்கள் மறக்காமல் நினைவு கூர்ந்து அவரின் பழைய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரேமலதா தனது கணவர் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கலா மாஸ்டர் உங்கள் கணவர் கொடுத்த முதல் கிப்ட் என்ன என்று கேட்க, அதற்கு பிரேமலதா அவருக்கு கிப்ட் கொடுக்கவே தெரியாது. 


எனக்கு ஜனவரி 31ந் தேதி திருமணமானது. திருமணமான ஒன்றரை மாதத்தில் அதாவது மார்ச்சில் எனது பிறந்த நாள் வந்தது. அப்போது கூட மனைவிக்கு வாழ்த்து சொல்லனும், கிப்ட் கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. 

அப்போது, அவருடன் உடன் இருந்த நண்பர்கள் அண்ணிக்கு இன்று பிறந்த நாள் ஏதாவது கிப்ட் வாங்கிக்கொடுங்கள் என்று சொன்ன பிறகுதான் அவர் V என்ற எழுத்துப்போட்ட செயினை எனக்கு பரிசாக கொடுத்தார். அது தான் அவர் எனக்கு கொடுத்த முதல் பரிசு, என்னிடம் எத்தனை நகைகள் இருந்தாலும் அந்த பரிசை நான் இப்போதும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement