• Nov 02 2024

முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இர்ஃபான்!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சினிமா துறை மற்றும் தொலைக்காட்சி துறை ஆகியவற்றுக்கு நிகராக தற்போது யூடியூப்பும் காணப்படுகிறது. இதில் தமிழ்நாட்டிலேயே பிரபலமாக காணப்படும்  யூடியூப்பர் தான்  இர்ஃபான். அவரது Irfan's view என்ற சேனல்களுக்கு 3.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் சினிமா நட்சத்திரங்களையும் அவர் பேட்டி எடுத்து வருகிறார்.


பல்வேறு ஊர்களுக்கு சென்று விதவிதமான உணவுகளை சுவைத்து அதனை ரிவ்யூ செய்து வீடியோவாக யூடியூப் சேனல் பதிவிட்டு சம்பாதித்து வருபவர்களில் பிரபலமானவர் தான் இர்ஃபான். இர்ஃபானுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் தற்போது முதன் முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குழந்தையின்  அழகை  வர்ணித்து வருவதோடு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.


Advertisement

Advertisement