• May 04 2026

மீண்டும் ரிஸ்க் எடுக்க தயாராகும் ஞானவேல்! வேட்டையன் 2 அப்டேட் இதோ...

shali / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். லைக்கா தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில் என பலர் நடித்துள்ளனர். 


மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அமோக வசூல் பெற்ற மகிழ்ச்சியில் படக்குழு ரஜினியை சந்தித்து தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. 


இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் பேசுகையில் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி கூறியுள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்கலாம் என ஐடியா உள்ளது.


அது வேட்டையன் படத்தின் prequel லாக உருவாக்கலாம் என நினைக்கின்றேன். ரஜினி இதற்கு ஓகே சொன்னால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement