• Jan 19 2025

ஆதியின் இசை நிகழ்ச்சி ஏற்பட்டில் சர்ச்சை !நிகழ்ச்சி இடம்பெறுமா?காவல்துறை அறிக்கை..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியில் வாகன நிறுத்துமிட ஏற்பாடு தொடர்பில் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை விடுத்துள்ளது.


இவ் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் மைதானத்தில் குறிப்பிட்ட 8 இடங்களில் மாத்திரம் வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து காவல்துறையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

மற்றும் நந்தனம் அரச கலை கல்லூரி,தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகம்,அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மைதானங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பொது போக்குவரத்து மூலம் வரும் பார்வையாளர்கள் நந்தனம் சந்திப்பில் பயர் சர்வீஸ் ஸ்டாலோன் கு அருகில் உள்ள பாதை வழியாக நடந்து இசைநிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றடையுமாறும் இசை நிகழ் ச்சி தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே இசை நிகழ்சிக்கு கலந்து கொண்டு பொலிஸாரிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement