• Jan 18 2025

இந்தியன் 2’ படத்தால் மறுபடியும் ரூ.65 கோடி நஷ்டம்.. ஷாருக்கானும் ஒரு காரணமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

’இந்தியன் 2’ படத்தால் லைகா நிறுவனத்திற்கு ஏற்கனவே பெரும் நஷ்டம் என்ற நிலையில் தற்போது மீண்டும் ரூ.65 கோடி நஷ்டம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தது. இந்த படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தத்தை அடுத்து இரண்டாவது நாளே இந்த படத்திற்கு கூட்டம் இல்லை என்றும் இந்த படம் மிகவும் சொற்பமான தொகை தான் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் ’இந்தியன் 2’ படத்தால் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்ற நிலையில் தற்போது ஓடிடி வியாபாரத்திலும் மிகப்பெரிய நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிகிறது. ’இந்தியன் 2’ திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில் தற்போது படம் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் விலையை குறைக்க முடிவு செய்தது.

பொதுவாக படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்குள் ஓடிடி கன்டென்ட் கொடுத்து விட வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் சரியான தேதியில் கன்டென்ட் கொடுக்கவில்லை என்பதற்காக இந்த படத்தின் விலையை பாதியாக நெட்பிளிக்ஸ் குறைத்து விட்டதாகவும் தற்போது 60 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக 65 கோடி ரூபாய் லைகா நிறுவனத்திற்கு புதிய நஷ்டம் என்று கூறப்படுகிறது. ஓடிடி நிறுவனத்திற்கு கன்டென்ட் சரியாமல் கொடுக்காமல் இருந்ததற்கு காரணம் ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம்தான் என்றும், அந்த நிறுவனத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் செய்ததற்கான தொகையை கொடுக்காததால் அந்நிறுவனம் ஓடிடி கன்டெண்ட் கொடுக்கவில்லை என்றும் அதனால் தான் இந்த பிரச்சனை வந்ததாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’இந்தியன் 2’ படத்தால் ஏற்கனவே பல கோடி நஷ்டம் அடைந்துள்ள லைகா நிறுவனம் தற்போது புதிதாக ரூ.65 கோடி நஷ்டம் ஆகி உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement