• Sep 07 2024

யாழ்ப்பாணத்தில் நடிகை ரம்பா குடும்பம்.. க்யூட் வீடியோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகையாக இருந்த ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா என்பதும் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. தமிழில் அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு 'பெண் சிங்கம்' என்ற படத்தில் நடித்ததை அடுத்து அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பதும் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்த பின்னர் அவர் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் இந்தியாவுக்கு வருகை தருவார் என்றும் குறிப்பாக சென்னைக்கு வருகை தரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அவர் சென்னைக்கு தனது குடும்பத்துடன் வந்து தளபதி விஜய்யை சந்தித்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் லைக்ஸ் குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ரம்பா தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார், குறிப்பாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள பள்ளி, கல்லூரிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை எடுத்து இலங்கை மக்கள் அவரை சந்தோஷத்துடன் வரவேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement