• Jan 18 2025

அது தெரிஞ்சி இருந்தா சந்தோசம்... டார்க் ஸ்கின் பசங்கள... சாய் பல்லவிக்கு பசங்க இப்படி இருந்ததால் தான் பிடிக்குமாம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. 


கதாநாயகியாக மட்டுமல்லாமல் சோலோ ஹீரோயினாகவும் நடித்து கலக்கி வரும் தமிழ் நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும், எப்படியெல்லம் இருந்தால் பிடிக்கும் என்பது குறித்து  சமீபத்தில் அளித்த பேட்டி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.


இதில் 'எனக்கு டார்க் ஸ்கின் பசங்கள பிடிக்கும். சென்சிட்டிவான பசங்கனா ரொம்ப பிடிக்கும். பையனா அழுக கூடாது அப்படியெல்லாம் இல்லை. எமோஷனலா அழகுற பையன எனக்கு பிடிக்கும். எனக்கு சமைக்க தெரியாது, அதனால் சமயல் செய்த பையனா இருந்தா ரொம்ப சந்தோஷம்' என கூறியுள்ளார். நடிகை சாய் பல்லவி பேசிய இந்த விஷயம் தற்போது சமுக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement