• Apr 15 2026

நான் மாடலிங் செய்வது அவனுக்கு பிடிக்கல; அதனால் பிரேக் அப் செய்துட்டன்! 'பாண்டியன் ஸ்டோர்ஸ் ' நடிகை பகீர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டுள்ளது.

இந்த சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்  நடிகை லாவண்யா. அத்தோடு இவர் இதற்க்கு முன் சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், அவர் 'ரேசர்' எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளாராம்.


இந்த நிலையில், முதல் முறையாக தன்னுடைய காதலனுடன் பிரேக் அப் செய்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை லாவண்யா.


இது குறித்து அவர் கூறுகையில், 'பொதுவாக பசங்க ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தான் நான் எதிர்பார்ப்பேன். நீ இப்படி தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும்னு, என்று  கண்டிஷன் போடறது எனக்கு பிடிக்காது... அந்த வகையில் நான் வங்கியில் வேலை செய்த போது நான் செஞ்சது எல்லாம் என்னுடைய காதலருக்கு பிடித்திருந்தது. ஆனால் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. என்னுடைய வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக அந்த காதல் தடையாக இருந்ததால், அவரை பிரேக்கப் செய்து விட்டேன்' என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement