கேப்டன் விஜயகாந்த் இரங்கல் நிகழ்வு தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இடம்பெற்ற கூட்டத்தின் போது நடிகர் விஷால் இவ்வாறு கேப்டன் பற்றி கூறியுள்ளார். விஷாலைப் பொறுத்தவரையில் இவர் சினிமாவை தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
கேப்டன் இரங்கல் நிகழ்வு தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இடம்பெற்ற கூட்டத்தின் போது நடிகர் விஷால் கேப்டன் மகனான சண்முகபாண்டியனை பார்த்து கூறியதாவது , "சண்முகபாண்டியனிடம் ஒரே ஒரு விஷயம் சொல்ல விரும்புகின்றேன் . கேப்டன் பற்றி சொல்லவே தேவையில்லை எல்லாருக்குமே தெரியும் , நடிகர்கள முன்னுக்கு தூக்கி விட்டதே அவர் தான் .
எந்த காசும் வேண்டாமா , கொடுத்த காசும் வேண்டாம நடிகர்களுக்கு ஒரு தூணாக இருந்து எல்லோருக்குமே வாய்ப்பு கொடுத்தவர். நான் உங்க வீட்டுபிள்ளையா நினைச்சி சொல்கின்றேன் . உன்னோட படத்தில எப்படியாவது நானும் நீயும் சேர்ந்து நடிக்கனும் என்று உனக்கு ஆசை இருந்தால் நான் வருவேன் . கேப்டன் எப்பிடி வேற நடிகர்களுக்கு தன்னை அர்பணித்தாரோ அதே மாதிரி உன்னோட படத்துக்கு என்னைய பயன்படுத்தனும் என்றால் நான் வருவேன்.
இது வெறும் வார்த்தையால நான் சொல்லவில்லை ஒரு நல்ல திரைப்படத்தில உன்னோட வந்து உனக்கு தூணாக இருப்பேன். நீயும் அப்பா மாதிரி பெரிய ஸ்தானத்திற்கு வரனும் என்பது என்னுடைய ஆசை , இதை நான் ஒரு பரிகாரமாக நினைத்து கொள்கின்றேன் . கேப்டன்ன பார்க்கும் போதெல்லாம் ஒரு விஷயம் தோணும் அந்த ஒரு தைரியம் அது உங்களுக்கும் குடும்பத்திற்கும் இருக்கின்றது . நான் உனக்கு சொன்னதை செய்வேன் , இந்த மைக் , மேடையில நிற்கிறேன் என்பதுக்காக சொல்லவில்லை . என்று உறுதியாக கூறியுள்ளார்
Listen News!