ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர்,ஏழைகள் மத்தியில் MGR என்று அழைக்கப்பட்டவர் . புரட்சி தலைவன் விஜயகாந்த். சினிமாவைப் போல ரியல் லைஃபிலும் ஹீரோவாகவே வலம் வந்தார் . சினிமாவில் லீடீல் இருந்தபோதே அவர் அரசியலிலும் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஈழ மக்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் முதன்முதலில் விஜயகாந்த்தான் உண்ணாவிரத போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
அதேபோல் நடிகர் சங்க தலைவராக இருந்தும் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார். ஆனால் இடையில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள், உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக சறுக்கலை சந்தித்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த அவர் கடந்த சில வாரங்களில் காலமானார் . இவரின் மறைவு தமிழகத்தையே புரட்டி போட்டது .
இந் நிலையில் மக்கள் ,ரசிகர்கள் , பிரபல நடிகர்கள் என நேரில் வந்து கண்ணீர் இரங்கல் தெரிவித்தனர் . அந்த ஒரு நிலையில் ஒரு சில பிரபல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தாமல் , கேப்டன் இறந்து சில நாட்களுக்கு பின் வந்து நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர் .
நடிகர் சங்கதிற்கே அவமானம் ஒரு சில நடிகர்கள் செய்த வேலை என கொந்தளித்து வலைப்பேச்சு ஆனந்த் அவர்கள் பேசினார் மேலும் அவர்கூறுகையில் தமிழகமே வியந்து பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சியா கேப்டன் விஜயகாந்த் இரங்கல் நிகழ்ச்சி நடக்கும் என்று நான் நினைத்து இருந்தன் . ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ரொம்ப ரொம்ப சுமாரா நடத்தி முடிச்சி இருக்கு நடிகர் சங்கம் அதை கேட்கும் போது வருத்தமா இருக்கு .
இதே மாதிரி கேப்டன் இறப்பு அன்றும் நடிகர் சங்கம் அவமானப்படுத்தியது . கொஞ்ச பெயர் அங்க நிற்கின்றோம் இங்க நிற்கின்றோம் என்று ஒரு சில நடிகர்களை தவிர மிகுதி பெயர் வேறு வேறு நாட்களில் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர் .
எல்லோருமே ஒன்றாக இறுதி பயணத்திற்கு வரவில்லை . நடிகர் சங்கம் ஒன்றாக திரண்டு ஒரு வேனில் வந்து அஞ்சலி செலுத்தி புதைக்க வேண்டிய ஒரு காரியத்தை இப்படி ஒரு கீழ் குறைவான வேலையாக நடிகர் சங்கம் செய்தது , ஒரு அரைவாசி பிரபலங்கள் நடிகராக வர காரணமே கேப்டன் தான் அதை எல்லோரும் மறந்து போய் விட்டார்கள் . என்றும் கோவத்தில் கொதித்து எழும்பினார் வலைப்பேச்சு ஆனந்த் .
Listen News!