• Dec 02 2024

நடித்தால் இப்படித்தான் நடிப்பேன்... U1 அதிரடி இசையில் புதிய படம்... சந்தானம், யோகி பாபு கூட்டணியில் இணைந்த நடிகர் சதீஷ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் காமெடி நடிகர்கள் வரிசையில் தகுதியான இடம் புடித்தவர்தான் நடிகர் சதீஷ். யோகிபாபு, சந்தானம் வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் என்ற தகவல் தற்போது அடிபட்டு வருகிறது. என்ன சங்கதி என்று பார்ப்போம் வாங்க


ஆரம்பத்தில் சினிமாவிற்குள் நுழையும் போது ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காத என்று பலரும் பல ஏக்கத்துடன் உள்ளே வருவார்கள். அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்று விடுவார்கள். அப்படித்தான் யோகி பாபு மற்றும் சந்தானத்திற்கு காமெடி நடிகர் என்ற அங்கீகாரம் கிடைத்தது.


இவர்களுக்கு கிடைத்த வரவேற்பினால் ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவு பண்ணி கதையின் நாயகனாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது காமெடி நடிகர் சதீஷும் சேர்ந்து விட்டார். இப்போதைக்கு காமெடி நடிகர் என்று யாருமே நிரந்தரமாக இல்லாத போது இவரும் ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.


அப்படி இவர் நடித்த படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். ஆனால் இந்த படம் பெய்லியர் ஆகத்தான் போனது. அதனாலயே எந்த வாய்ப்பும் இல்லாமல் கடந்த ஆறு மாதங்களாக நடிப்பை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்தார். ஆனால் தற்போது மனதை தேற்றி விட்டு மீண்டும் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று முடிவுடன் வந்திருக்கிறார்.


அப்படி இவர் ஹீரோவாக நடிக்கும் படம் தான் “காஞ்சுரிங் கண்ணப்பன்” இந்த படத்தில் இவர்தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு டி.ஆர் கார்டனில் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் திரில்லர் படமாக இருக்கப் போகிறது.


அத்துடன் இதில் இவருக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கப் போகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வராஜ் சேவியர் இயக்குகிறார்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார். இவர் கமிட்டாய் இருக்கிறார் என்று தெரிந்ததுமே இப்படத்திற்கான மார்க்கெட் ரேட் அதிகரித்து விட்டது. ஏனென்றால் அந்த அளவிற்கு யுவன் அவருடைய பெஸ்ட்டை கொடுக்கக் கூடியவர். அதனாலயே இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமைகள் மட்டுமே 9 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் சதீஷும் ஹீரோவாக நடிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தெரிகிறது.


Advertisement

Advertisement