• Dec 23 2024

"யாருக்காச்சும் வெளிய போகணும்னு ஆர்வம் இருக்கா"போட்டியாளர்களிடம் மாஸ் காட்டும் சேதுபதி..!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோவாகிய பிக்பாஸ் சீசன் 8 இன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.அது குறித்து பார்க்கலாம் வார இறுதி எபிசோட் விஜய் சேதுபதிக்கு உரியது இன்றைய தினம் அவர் மிகவும் மாஸாக எவிக்சன் கார்ட்டுடன் வந்து இறங்கியுள்ளார் அநேகமான இன்றைய நாளுக்கான காட்சிகள் நேற்றைய தினமே படப்பிடிப்பு முடிந்துவிடும் இந்த நிலையில் பல அதிகாரபூர்வமற்ற தகவல்களின் மூலம் ரஞ்சித் வெளியேறியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அது ஒரு புறம் இருக்க இப்பொது சேதுபதி ப்ரோமோவில் "வாரா வாரம் பாக்கிறேன் உங்கள மட்டும் என்னால புரிஞ்சுக்கவே முடியல;வெளியே போயிடுவமே என உள்ளுக்கிருக்கிறவங்க வருத்தப்படுறாங்க இவங்க வெளியே போறாங்கன்னு இவ்வளவு சந்தோஷமா கை தட்டிறீங்களே என்னது இது;உள்ள இருக்கிறவங்க யாருக்காச்சும் வெளிய போகணும்னு ஆர்வம் இருக்கா கைய தூக்குங்க என் கண்டெஸ்டண்ட் பத்தி எனக்கு தெரியாதா எவ்வளவு தான் சண்டை போட்டாலும் மறுபடியும் பிரென்ட் எண்டு சொல்லிட்டு சண்டை போடுவாங்க"என போட்டியாளர்களை கலாய்த்தபடியே எவிக்ஷன் கார்டினை தூக்கினர்.


ரஞ்சித் மற்றும் ரானவ் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும் யார் இந்த வாரம் எலிமினேட் ஆகுவார்கள் எனவும் இல்லாவிடின் அடுத்த வாரம் குடும்பத்தார் உள்ளே வரும் டாஸ்க்குகள் ஆரம்பமாகவுள்ளதால் எலிமினேஷனில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பொறுத்திருந்து பார்க்கலாம்..

Advertisement

Advertisement