• Jan 19 2025

பிரபல காமெடி நடிகர் போண்டா மணி திடீர் உயிரிழப்பு! தமிழ்த் திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை பொழிச்சலூரில் வசித்துவந்த நடிகர் போண்டா மணி, திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். தற்போது இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1991-ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி. வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேலும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் போண்டா மணி நடித்துள்ளார்.


சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட  நடிகர் போண்டா மணி, சென்னையில் உள்ள  மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

அத்துடன், அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணியை , மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


மேலும், அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement