• Jan 18 2025

கூலி திரைப்படத்தில் இணையும் மஞ்சுமல் பாய்ஸ் பிரபலம்... தெறிக்கும் எதிர்பார்ப்பு... இதோ புகைப்படம்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஆர்வத்தை கூட்டுகிறது. இந்நிலையில் தற்போது இன்னுமொரு அப்டேட் கிடைத்துள்ளது. 


ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம் , நடிகர் அமீர் கான் என பலர் கூலி படத்தில் இணைந்துள்ளனர் என தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.


படத்தில் நடிக்கப்போகும் கதாபாத்திரங்கள் குறித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தற்போது  மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்திருக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





Advertisement

Advertisement