தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வில்லன் கதாப்பாத்திரங்களில் திகழ்ந்து வரும் திறமைமிக்க நடிகராக விநாயகன் விளங்குகின்றார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் அவர் நடித்த வில்லன் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது அவர் தொடர்பாக வெளியாகியிருக்கும் ஒரு சம்பவம், திரையுலகத்தையே உலுக்கி வருகின்றது.
சமீபத்தில் கேரளாவில் உள்ள பிரமாண்டமான 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் விநாயகன், மது அருந்திய நிலையில் ஹோட்டல் லாபியில் வெளிநாட்டுப் பெண்ணிடம் வாக்குவாதம் மற்றும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பொதுமக்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பின் அந்த ஹோட்டல் நிர்வாகம் பொலிஸில் புகார் ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரினை கேரளா மாநில பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நடிகர் விநாயகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சில மணி நேரங்களில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Listen News!