• Apr 15 2026

முத்துவை புதிய குழப்பத்தில் மாட்டி விட்ட மீனா- சமாளிக்க முடியாமல் தவிக்கும் முத்து- ரொமாண்டிக்கான Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் முத்துவின் காரை அண்ணாமலை திரும்பவும் வாங்கிக் கொடுத்ததால் முத்து செம சந்தோசத்தில் இருக்கின்றார். இதனால் மீனா தன்னை காரில் ஒரு இடத்திற்குக் கூட்டிட்டு போகச் சொல்கின்றார்.

இதனால் முத்துவும் மீனாவை கூட்டிக் கொண்டு ஒரு கோயிலுக்கு போகின்றார். அங்கே கணவன்மார்கள் மனைவிகளை துாக்கிட்டு நடப்பதைப் பார்த்த முத்து எதற்காக இப்படி நடக்கிறாங்க என்று கேட்கின்றார்.

அப்போது மீனா இது தான் வேண்டுதல், உங்களுடைய கார் திரும்ப கிடைக்கனும் முதல் மாதிரி நிறைய சம்பாதிக்கனும் என்று வேண்டியிருக்கிறேன். என்னையும் துாக்கிட்டு மேல போங்க என்கின்றார். இதனால் முத்துவும் மீனாவைத் துாக்கிக் கொண்டு மேலே போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement