• Jan 18 2025

ஹீரோவானார் ஆர்.ஜே.விஜய்... செம்ம லவ் ஸ்டோரியா இருக்கே... நியூ அப்டேட் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரேடியோ மற்றும் சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர் ஆர்.ஜே.விஜய் தற்போது பிரமாண்ட சினிமா விழாக்களில் தொகுப்பாளராக கலக்கி வருகிறார். டான் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்து வந்த இவருக்கு தற்போது ஹீரோவாக வாய்ப்பு கிடைத்துள்ளது. 


இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் கதை நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை மனம் கொத்திப் பறவை, ஜிப்சி, கழுவேர்த்தி மூர்க்கன், டாடா படங்களை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஹேமநாதன் என்ற புதுமுகம் இயக்குகிறார். டாடா படத்துக்கு இசையமைத்த ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.


படம் குறித்து இயக்குனர் ஹேமநாதன் கூறும்போது, “இது கணவன், மனைவி இடையிலான அன்பு, ஈகோ இரண்டையும் சொல்லும் கதை, கணவனாக ஆர்ஜே விஜய், மனைவியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்கள். கதைப்படி நாயகன் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனால் ஆர்.ஜே.விஜையை அந்த கேரக்டரிலேயே நடிக்க வைக்கிறோம். ஹீரோயின் பாடகி. அதனால் அத்தகைய முகவெட்டு, பாடிலாங்குவேஜ் தேவைப்பட்டதால் அஞ்சலி நாயரை நடிக்க வைக்கிறோம். இது பீல் குட் படமாக இருக்கும். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement