• Jan 19 2025

என்னோட ரூமுக்கு வா பயில்வானா, இல்லையா என்று காட்டுறேன்- பிரபல தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய பயில்வான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்பொழுது சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகின்றார். அதில் நடிகர் மற்றும் நடிகைகளில் அந்தரங்க விஷயம் குறித்தும் ஓபனாகப் பேசி வருகின்றார்.

இந்நிலையில்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதனிடம் பழைய நடிகர், நடிகையரின் அந்தரங்க விஷயங்களை தற்போது பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா? அவர்களின் வாழ்க்கை எப்படி போன உங்களுக்கு என்ன,உங்களுக்கு காசு வந்தா போதுமா என்று கேள்வி கேட்டார் தொகுப்பாளினி ஒருவர். 


இதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன், என்னை பற்றி என் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும், நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,பாக்யராஜ் போன்ற நல்ல மனிதர்கள் தான் என்னை சினிமாவில் வளர்த்துவிட்டார்கள். இதனால், சினிமாவில் உள்ள சாக்கடையை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறேன் என்றார்.

இதைத்தொடர்ந்து தொகுப்பாளினி இந்த சாக்கடையில் தான் நீங்க வளர்ந்தீங்க என்பதை மறந்துவிடாதீர்கள் என்று பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டென்ஷனான பயில்வான் என் வெயிட்டுக்கும், உடம்புக்கும் எட்டி மிதிச்ச சட்னி ஆய்டுவா என்று சொல்ல, தொகுப்பாளினி முன்புதான் நீங்க பயில்வான் இப்போது நீங்க நொந்த பயில்வான் என்றார். 


இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பயில்வான் ரங்கநாதன், எனக்கு பாடி டிமெண்ட் அதிகம், ரூமுக்கு வா நான் பயில்வானா இல்லையா என்பதை காட்டுகிறேன் என்று படுமோசமாக பேசினார்.இதனால் ரசிகர்கள் பலரும் பயில்வானைத் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement